நாளைய பஞ்சாங்கம்
30-09-2020, புரட்டாசி 14, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.26 வரை பின்பு பௌர்ணமி.
பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு உத்திரட்டாதி.
அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
நாளைய ராசிப்பலன் – 30.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் உற்சாகத்துடன் செய்து முடித்து விடுவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் உண்டாகும். தொழிலில் உடன் இருப்பவர்களுடன் லாபத்தை பெறுவீர். பொன்னும் பொருளும் சேரும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் பெருகும். உடல்நலம் சீராக இருக்கும்.தொழிலில் மேலதிகாரிகளிடம் இருந்து அன்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உழைப்புக்கேற்ப பலன் கிடைக்க தாமதமடையும். வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உத்யோக ரீதியில் எடுக்கும் முயற்சிகள் அனுகூலம் கொடுக்கும். தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன குழப்பத்துடனே இருப்பீர்கள். தொழிலில் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தவிர்க்கலாம். வீண் அலைச்சல் ஏற்படும். கவனமாக இருங்கள்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பணிச்சுமை நீங்கும். பெரியவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் சம்பந்தமான முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். வீண் செலவு குறையும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கால தாமதமாக முடியும் செயல்கள் விரைவில் முடிய வாய்ப்பு. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் மன கஷ்டம் ஏற்படும். வீட்டில் அமைதி குறையக்கூடும். குழந்தைகள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சேமிப்பு குறையும். தொழிலில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. நண்பர்களின் உதவி கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வரவை விட செலவு கூடும். குழந்தைகள் படிப்பில் மந்தநிலை உருவாகும். தொழிலில் டென்ஷன் பிரச்சனை வரும்.தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பெறுவீர்.
தனுசு
உங்களின் ராசிக்கு பேச்சுத் திறமையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பார்க்காத செலவு உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது சிந்தித்து செயல்படுங்கள் அதுவே நல்லது. குழந்தைகள் மூலம் மன கஷ்டம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் அனுகூலம் உருவாகும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். வீட்டில் ஒற்றுமை நிலவும். வீட்டில் சிக்கன் அத்துடன் இருந்தால் செலவு கட்டுக்குள் இருக்கும். தேவையானவை அனைத்தும் பூர்த்தியாகும்.தொழில் செய்பவர்களுக்கு மதிப்பு மரியாதை உண்டாகும். வங்கியில் உள்ள சேமிப்பு உயரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு ஒற்றுமை குறையும். வாகனங்களால் வீண் செலவு ஏற்படும். உடல் நிலையில் சிறு பாதிப்பு தோன்றும்.தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உற்றார் உறவினர்களின் உதவி கிடைக்கும்.