Categories
உலக செய்திகள்

பயங்கரம்..! கழிவுநீர்க்குழாயில் அடைப்பு… ஊழியர்கள் சரிசெய்யும்போது.. “தென்பட்ட உடல் பாகம்”… விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!!

கழிவுநீர் குழாய் அடைப்பை சுத்தம் செய்ய வந்த பணியாளர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கனடாவைச் சேர்ந்த Adam என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக துப்புரவு பணியாளரை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த பணியாளர் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததை கண்டு சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனால் Adam வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடைப்புக்கு காரணமான பொருள் மாமிசம் போன்று இருப்பதை கண்டு வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர்.

வீட்டின் உள்ளே இருந்து வெளியில் வந்த Adam-இடம் காவல்துறையினர் கழிப்பறையில் எதை பிளஸ் செய்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு சிறிதும் பயமில்லாமல் Adam ஓகே, நீங்கள் உண்மையை கண்டுபிடித்து விட்டீர்கள். அது ஒரு மனித உடல்தான். மீதி உடல் பாகங்கள் வேண்டும் என்றால் எனது ஃப்ரீசரில் உள்ளது எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் Adam வீட்டை சோதனை செய்தபோது அங்கு ஃப்ரீசரில் துண்டுகள் ஆக்கப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததோடு பட்டாக்கத்தி ஒன்றும் இருந்துள்ளது. ஃப்ரீசரில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்களையும் கத்தியிலிருந்த மாமிச துண்டுகளையும் சோதித்து பார்த்தபோது இரண்டு பெண்களின் டிஎன்ஏ அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மீனவர்கள் சிலர் ஓசாவா துறைமுகத்தில் பெண்ணின் உடல் பாதத்தை கண்டுபிடித்துள்ளனர். அதேநேரம் கூகுள் தரவுகளின் அடிப்படையில் அந்த பகுதியில் Adam தனது கைபேசியை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் மீனவர்களுக்கு கிடைத்த உடல்பாகம் Adam வீட்டு ஃப்ரீசரில் இருந்த உடல்பாகங்களின் மிச்சம் என்பது உறுதியானது.

மேலும் உடல் பாகங்களுக்கு சொந்தமான இரண்டு பெண்களும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. எந்த ஒரு ஆதரவும் இன்றி தனக்கு அறிமுகமான Kandis Fitzpatrix மற்றும் Rori Hache என்ற இரண்டு பெண்களை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |