Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா… மருத்துவ அவசர நிலை கட்டாயம்…!!!

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மருத்துவ அவசர நிலை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கொல்லம் மாவட்டத்தில் சவரா மற்றும் ஆலப்புழாவில் குட்டநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலச் செயலாளர் கோபகுமார் மற்றும் மாநில தலைவர் ஆபிரகாம் ஆகியோர் முதல் அமைச்சர் பிரணாப் விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது மிக மோசமான நிலைமையை உண்டாக்கும் என கூறியுள்ளனர்.

மேலும் கொரோனாவின் தீவிரத்தை மக்கள் உணரவும், நோயை கட்டுப்படுத்தவும் மருத்துவ அவசர நிலை பிறப்பிப்பது கட்டாயம் அவசியம் என்றும் கூறியுள்ளனர். கேரளாவில் கடந்த ஆறு மாதங்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Categories

Tech |