ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அணிகளின் மீது பணம் வைத்து பந்தயம் கட்டிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் ஹரியானவி ல் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இந்த அணிகளின் மீது பந்தயம் கட்டி சூதாட்டம் ஆடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து அவர்களை கைது செய்தனர்.மேலும் அவர்கள் வைத்திருந்த 2 மடிக்கணினிகள், ஒரு எல்இடி டிவி, 12 ஸ்மார்ட் போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது