Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

“தமிழகத்தில் மீண்டும் தேர்தல்” மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை …..!!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி என  10 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குபதிவு நடத்த தேர்தலை ஆணையத்தை தமிழக தேர்தல் அதிகாரி வழியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18_ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் சில இடங்களில் முறைகேடாக கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்ததையடுத்து தமிழக தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமை தேர்தல் ஆணையத்த்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிக்கு ,  பூந்தமல்லி_யில் 1 வாக்குசாவடிக்கும் , கடலூரில் 1 வாக்குச்சாவடிக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |