லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற லே பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நில நடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.