Categories
தேசிய செய்திகள்

உபி கொடூரம் : #JusticeForManishavalmiki டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்….!!

உபி  மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணிற்கு ஆதரவாக ட்விட்டரில் தொடர் கருத்துக்கள் பதிவிடப்பட்டு  வருகின்றன. 

உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ்  மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி மனிஷா வால்மீகி  என்ற  20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து  சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த  பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் #JusticeForManishavalmiki #Nirbhaya என்ற Hashtag-களில்  முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையை குறிப்பிட்டு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |