குஜராத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்ற பகுதியில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.