சென்னை அருகே போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரை தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில், பலர் வேலை வாய்ப்பின்றி தவித்து வரும் சூழ்நிலையில், ஒரு சிலரோ மக்களிடம் எப்படி ஏமாற்றி காசு பறிக்கலாம் என்று சிந்தித்து மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில்,
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் நடத்தி நூற்றுக் கணக்கான பொது மக்களை ஏமாற்றிய கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. மக்களே இது போன்ற போலிகளிடம் சிக்கி உங்கள் பணத்தை இழக்காதீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.