தமிழகத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தற்போதுவரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில்,
கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்வதாக தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.