Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதிய கலெக்டர் அலுவலகம்…. ஆரம்பப் பணிகள் தொடக்கம்… கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு…!!

புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்டும் பணிகளை பொதுத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதலமைச்சர் கடந்த 26 .11. 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.இதைஅடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக அங்கு இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வீர சோழபுரத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக ரூ 104 கோடி நிதி உதவியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது .புதிய கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் இருக்கும் செடி ,கொடி ,புதர்களை அகற்றி சமன் நிலமாக செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை பொதுப்பணித்துறை வேலூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நேற்று நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது கலெக்டர் அலுவலகம் கட்டிட முகப்பு பகுதி எந்த திசையை நோக்கி அமைய வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எவ்வளவு தூரத்தில் கட்ட வேண்டுமென கலந்துரையாடினர்.

மேலும் பாதை அமைத்தல், கட்டிட அமைப்பு குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளும்போது விழுப்புரம் செயற்பொறியாளர் வெங்கடாஜலம், கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி செயற்பொறியாளர் கௌதம், உதவி பொறியாளர் பாலபாரதி, யாசர் அராபத் ஆகியோரும் இருந்தனர்.புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் 3 லட்சம்  சதுர அடி பரப்பளவில் 8 மாடிகளுடன் கட்டப்பட உள்ளது .அதில் 66 அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் குடியிருப்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் குடியிருப்பு ,கவாத்து மைதானம், விளையாட்டு மைதானம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Categories

Tech |