அடகு வைத்த தாலிச் சங்கிலியை மீட்டு தராததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் அருகே அமையப்பெற்றிருக்கும் திருமால் வீதியை சேர்ந்த வர்கள் பிரிட்டோ-கரோலின் தம்பதியினர். பிரிட்டோ கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இதனால் தனது மனைவியின் தாலி சங்கிலியை சிகிச்சை செலவிற்காக அடகு வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கரோலின் தொடர்ந்து பிரிட்டோவிடம் அடகு வைத்த நகையை மீட்டு தருமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர்களிடையே தகராறு முற்றிய நிலையில் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன்பிறகு பிரிட்டோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கரோலின் காய்கறி வெட்டும் போது தெரியாமல் கத்தி பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரிட்டோ இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கோபத்தில் கரோலின் தான் கணவரை கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.