Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பான பந்துவீச்சு… டெல்லியை வீழ்த்தி… முதல் வெற்றியை ருசித்த சன்ரைசர்ஸ்..!!

 டெல்லி கேப்பிடல் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற 11ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.. இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.. சிறப்பாக ஆடிய கேப்டன் வார்னர் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.. அவரை தொடர்ந்து வந்த வேகத்தில் மணிஷ் பாண்டே சொற்ப ரன்னில் ஏமாற்றம் அளித்து நடையை கட்டினார்..

மறுமுனையில் பொறுப்புடன் ஆடி ஜானி பேர்ஸ்டோ ஐந்தாவது அரைசதத்தை பதிவு செய்தார்.. பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் சிறப்பாக ஆடினார்.. இறுதியில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து இருவரும் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 53 ரன்களும், வார்னர் 45 ரன்களும், கேன் வில்லியம்சன் 41 ரன்களும் எடுத்தனர்..

இதையடுத்து 164 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.. இளம் வீரர் பிருத்வி ஷாவும், ஷிகர் தவானும் ஓப்பனிங் இறங்கினர்.. டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிருத்வி ஷா 2 ரன்களிலும், அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.. மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஷிகர் தவான் 34 ரன்களில் ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்..

அதன்பின் ரிஷப் பண்ட், சிம்ரன் ஹெட் மேயர் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர்.. ஹெட் மேயர் 2 சிக்ஸர் அடித்து மிரட்டிய நிலையில் ஆட்டமிழக்க, அதைத்தொடர்ந்து பண்ட்டும் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.. அதன்பிறகு வந்த வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது..

இதனால் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.. அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. இந்த வெற்றியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஹைதராபாத்…

Categories

Tech |