Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்… “பெற்ற தாயை கொலைசெய்து எரித்த மகன்”… எல்லாம் இதுக்காகவா… அதிரவைக்கும் சம்பவம்..!!

திருச்செங்கோடு அருகே சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சொத்து தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது..

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஏற்பட்ட சொத்து தகராறில் மகன் பிரகாஷ் தாய் பங்கஜத்தை இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்து, நள்ளிரவில் தீவைத்து  எரித்து சாம்பலாக்கிவிட்டு பின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து பிரகாஷை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், தோக்கவாடி கிராம நிர்வாக அலுவலர் வரதராஜிடம் பிரகாஷ் நேற்று சரணடைந்தார்.. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை போலீசாரிடம்  ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, போலீசார் பிரகாஷை திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பரமத்தி கிளைச்சிறையிலடைத்தனர்.

Categories

Tech |