Categories
மாநில செய்திகள்

 பாபர் மசூதி இடிப்பு வழக்கு… இன்று முடிவுக்கு வரும் தீர்ப்பு… தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு…!!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் கோரி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களில் 17 பேர் உயிர் இழந்து விட்டதால்,மீதமுள்ள 32 பேர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கின்ற சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

இந்த தீர்ப்பினால் நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வகையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கியமான இடங்களில் போலீசார் அதிக அளவு பாதுகாப்புக்காக குறிக்கப் படுவார்கள் என்றும்,போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |