திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பாக செயல்திறன் அளவீட்டு முறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட பணியாக 16,621 தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.