Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையம்… புரட்டிப்போட்ட சூறைக்காற்று… வானில் வட்டமடித்த 3 விமானங்கள்…!!!

சென்னை விமான நிலையத்தில் பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மூன்று விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் பரங்கிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு 81 பயணிகளை கொண்ட விமானம் ஒன்று நேற்று மாலை 5 மணி அளவில் வந்தது. அப்போது பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி தராததால் விமானம் வானத்திலேயே வட்டம் அடித்தது.

அதனைப் போன்றே தோகாவிலிருந்து 108 பயணிகளுடன் கூடிய விமானம் மாலை 5.15 மணிக்கு தரையிறங்க வந்தது. அதன் பிறகு குவைத்திலிருந்து தரை இறங்கி வந்த சரக்கு விமானம் ஆகிய இரு விமானங்களும் தரையிறங்க முடியாமல் அதிகாரிகளின் அனுமதி வேண்டி வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தன. அதன் பிறகு வானிலை சீரானதும் மாலை 6.30 மணி அளவில் மூன்று விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின.பலத்த சூறைக்காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

Categories

Tech |