இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான மாதிரி பரிசோதனைகள் 8 கோடியை எட்டியுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை எட்டியுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது வரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 7.41 கோடி ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு நேற்று வரையில் மட்டும் 10,86,688 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.