Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – இன்று தீர்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த    1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 92ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட உள்ளனர். இவ்வழக்கின் விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பேரில் அரசு  தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர்  தரப்பு சார்பில் இறுதி கட்ட வாதப்பிரதிவாதங்கள் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி  திரு எஸ்.கே. யாதவ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |