Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (01-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!

நாளைய  பஞ்சாங்கம்

01-10-2020, புரட்டாசி 15, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.35 வரை பின்பு தேய்பிறை பிரதமை.

உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.56 வரை பின்பு ரேவதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பௌர்ணமி விரதம்.

 

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

 எம கண்டம்- காலை 06.00-07.30,

 குளிகன் காலை 09.00-10.30,

 சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

நாளைய ராசிப்பலன் –  01.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் யோசித்து செய்யுங்கள் அதுவே நல்லது. உடல் இளைக்க சிறு தொகையை செலவிட நேரும். உத்தியோக ரீதியில் எடுக்கும் முடிவு அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பணவரவு இருக்கும். கடன் நீங்கும். நிதானமாக இருங்கள் அதுவே நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்குஎந்த விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்பு கூடும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி கூடும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தனவரவு இருக்கும். கடன் தொல்லை தீரும். சுபகாரியங்களில் முன்னேற்றம் காண்பீர். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். தொழிலில் போட்டி பொறாமை நீங்கும். தொழிலில் வெளிவட்டார நட்பு உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் மந்தநிலை ஏற்படும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறைந்தே இருக்கும். உத்தியோக ரீதியில் உள்ள முயற்சிகள் அனைத்திற்கும் வீட்டில் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். கடவுள் ஈடுபாடு இருக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு மன சோர்வு உண்டாகும்.உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானமாக செய்யுங்கள் அதுவே நல்லது. வெளி வட்டாரங்களில் கவனமாக பேசுங்கள். வாகனங்களில் கவனமாக செல்லுங்கள் விபத்துகள் நேரம் வாய்ப்பு இருக்கு.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை கூடும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும்.உத்தியோகத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் திருப்தி உண்டாகும். தொழிலில் சிலருக்கு பொறுப்பு வரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு திடீர் பண வரவுகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். எதிர்பாராத உதவி சமீபத்தில் கிடைக்க வாய்ப்பு. வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். வருமானம் இரட்டிப்பு அடையும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் நிம்மதியற்ற நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். உடல்நிலையில் பாதிப்பு வரக்கூடும். சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் உடன் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வரவும் செலவும் இருக்கும். தொழிலில் இழுபறி நிலை இருக்கும். உத்தியோக ரீதியில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பு அமையும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். சிக்கனமாக இருப்பதனால் பணப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் உருவாகும். குழந்தைகளின் மூலம் பெருமை அடைவீர். தொழிலில் மேலதிகாரிகளிடம் இருந்து பெருமை அடைவீர்கள். அரசு ரீதியில் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்வது மூலம் அனுகூலம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு என்ன காரியங்கள் செய்தாலும் தடை ஏற்படும். தொழிலில் நண்பர்களால் வீண் மனஸ்தாபம் பெருகும். வெளியூர் பயணம் செய்வதன் மூலம் உடல் சோர்வு அடைவீர். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெரியவர்களின் சந்திப்பால் உடலுக்கும் மனதிற்கும் புது தெம்பு கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் சிறப்பு காண்பீர். உற்றார் உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். புலிகள் சத்துக்களின் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.

Categories

Tech |