இதுகுறித்து குர்பிரதாப் போபாரி கூறுகையில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை சர்வதேச அளவில் தரம் உயர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையான வசதியை பெற்றிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுவினரின் அயராத உழைப்பும், முயற்சியும் தான் நாங்கள் எட்டப்பட்டிருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு காரணம். இதற்க்கு எங்களது மொத்த நிர்வாக குழு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சந்தையில் எங்கள் நிறுவனத்தின் பத்து லட்சமாவது காரை வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மைல்கல் சாதனை மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியில் மேலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை பல்வேறு நாட்டுக்கும், உலக சந்தைகளுக்கும் எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய விரும்புவதாக குர்பிரதாப் போபாரி தெரிவித்துள்ளார்.