Categories
தேசிய செய்திகள்

டிரம்ப் – ஜோ பிடன் காரசார விவாதம்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது.

இதில் அதிபர் டிரம்ப், ஜோ பிடன் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டோனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதம் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி ஓஹியோ மாகாணம் கிளீபாண்டில்  இருவருக்கும் இடையே விவாதம் வாக்ஸ் டிவி என்ற செய்தி சானலில் பிரபல தொகுப்பாளர் கிரிஸ் வாலிஸ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ட்ரம்பும், ஜோ பிடமும் அனல் தெறிக்க விவாதத்தில் ஈடுபட்டனர். ஜோ பிடனை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்ப் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த ஜோ  பிடம், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவது இல்லை என விமர்சித்தார். அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் உள்ளதாகவும் கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்டு டிரம்ப் தான் என ஜோ பிடன்  கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி புளோரிடா மாகாணம் மியாநியிளும் அக்டோபர் 22ஆம் தேதி மாகாணம் நாஷ்வில்லிலும் ட்ரம்பும், ஜோ பிடனும்  விவாதம் நடத்துகிறார்கள்.

Categories

Tech |