Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா.! ஒரு மணி நேரத்துக்கு இத்தனை கோடியா?.. மாஸாக முதலிடத்தில் நிற்கும் அம்பானி..!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9 ஆவது வருடமாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதை ஐஐஎப்எல் ஹெல்த் ஹுருன் வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக முகேஷ் அம்பானி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார்.

தொடர்ந்து அவர் ஈட்டிய வருவாய் மற்றும் முதலீடுகளில் கிடைத்த சொத்து மதிப்பான 2,77,700 கோடி ரூபாய் அவரது மொத்த சொத்து மதிப்பை அதிகரித்து 6,58,400 கோடியாக உயர்ந்து நிற்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அவருக்கு அடுத்ததாக பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 5 பேரின் சொத்து மதிப்பை ஒன்றாக கூட்டினாலும் ஈடாகாது. இது முகேஷ் அம்பானியை உலகின் நான்காவது பணக்காரராகவும் ஆசியாவின் முதல் பணக்காரராகவும் மாற்றியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |