பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நாலாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. அதோடு அவ்வப்போது போட்டியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரேகா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, ஆர்ஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும் ரியோ, ஜித்தன் ரமேஷ், மாடல் பாலாஜி முருகதாஸ், சிங்கர் அஜிஸ் ஆகிய ஆண் போட்டியாளரும் பங்கேற்க உள்ளனர்.