பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அனைவரும் தங்களின் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. அந்த பயங்கர சத்தத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அப்போது பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் நடந்து கொண்டிருந்தது. இந்த பயங்கர சட்டத்தால் விளையாட்டு சில வினாடிகள் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த சத்தம் அதிநவீன விமானம் ஒன்றில் இருந்து வெளிபட்ட சத்தம் என்பது தெரியவந்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.