கரூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலியை தொலைத்த அச்சத்தில் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பரமத்திகுளம் என்ற பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக பூபதி என்பவர் இருக்கிறார். அவருக்கு 18 வயது உடைய தீபக் என்ற மகன் உள்ளார்.அவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்தார்.அவர் நேற்று தனது நண்பர்களுடன் வெளியில் விளையாட சென்றபோது எதிர்பாராதவிதமாக தன் கையிலிருந்த தங்க சங்கிலியை தொலைத்துவிட்டார். அந்தச் சங்கிலியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தனது பெற்றோர் தன்னை திட்டுவார்கள் என்ற அச்சத்தில் தீபக்,அப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீபக் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கச்சங்கிலியை தொலைத்ததால் மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.