Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… கடலைப்பருப்பு சாப்பிட்ட குழந்தை பரிதாப பலி…!!

18 மாத குழந்தை கடலை பருப்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 18 மாதத்தில் தர்ஷனா என்ற மகள் இருந்தார். கடந்த திங்களன்று தர்ஷனா அளவுக்கதிகமாக கடலைப்பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது தர்ஷனாவின் தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தர்ஷனாவிற்கு சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்த உணவை கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Categories

Tech |