Categories
தேசிய செய்திகள்

40க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி… 5 பேரை தூக்கிய சைபர் போலீசார்…!!

40 க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

தெலுங்கானாவில் தொடர்ந்து ஓஎல்எக்ஸ் மூலமாக பண மோசடி நடந்து வருவதாக காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்தது. நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவானதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சுமார் 30 நாட்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் ராஜஸ்தானை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 21 சிம்கார்டுகள், ஒரு லட்ச ரூபாய் பணம், 12 ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அந்த கும்பலுக்கு ரூக்மின் என்பவர் தலைவராக இருந்தார். இவர்கள் போலியாக வங்கிக் கணக்குகள் மற்றும் இ-வல்லெட் கணக்குகள் போன்றவற்றை திறந்து வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கான யூ ஆர் குறியீடை அனுப்புகின்றனர்.

பொருட்கள் வீட்டிற்கு வந்துவிடும் என்று கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களது பேச்சை நம்பி பலர் தங்கள் ஆசையினால் பணத்தை இழந்துள்ளனர். ஓஎல்எக்ஸ் மூலம் பொருட்களை வாங்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |