கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அதிர்ச்சி நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போல ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் பலாத்காரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உ.பியை தொடர்ந்து தமிழகத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.