தல அஜித் பற்றி நடிகை சயீஷா தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் நடித்த படம் வெளியானால் திரையரங்குகள் விழாக்கோலம் காணும். எப்போதும் அமைதியாகவே இருக்கும் தல அஜித் அவரது பெயரில் மோசடி நடந்து வருவதாகவும் அதனை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன்பிறகு அவர் சார்பாக எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் நடிகை சயீஷா அஜித் குமார் பற்றி தனது கருத்தை பதித்துள்ளார். அவர்கள் மீது பெரிய மரியாதை எனக்கு உள்ளது. அவர் மிகவும் அழகானவர் அதோடு சிறந்த நடிகரும் என்று பதிவிட்டுள்ளார்.