அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்திலும் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை தளர்வுகளுடன் நீட்டித்து திரையரங்கு உள்ளிட்டவை செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 15 முதல் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்படலாம். அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி கூடங்களை திறக்கலாம். சமூக அரசியல், மத நிகழ்வுகளில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை தளர்வின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.