Categories
தேசிய செய்திகள்

மொபைல் தேவையில்லை….. “வீட்டு வாசலில் கல்வி”….. சமூக இடைவெளியுடன்….. கிராமம் முழுக்க வகுப்பறைகள்….!!

ஜார்கண்ட் மாநிலத்தில்ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்காக பள்ளி ஆசிரியர் ஒருவர் செய்த செயல் பெருமளவில் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும்,

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறப்பது குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இச்சூழ்நிலையில், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மாணவர்களால் ஆன்லைன் மூலம் கல்வி கற்க இயலவில்லை. இதை உணர்ந்த பலர் சமூக ஆர்வலர்களும், சில அரசு பள்ளி ஆசிரியர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போன் வாங்கித் தருவது உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆனால் ஜார்கண்ட் மாநிலம் தும்கா, துமார்த்தர் கிராமத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் அதற்கும், ஒருபடி மேலாகச் சென்று அனைத்து வீடுகளின் வெளிப்புற சுவர்களில் கரும்பலகையை உருவாக்கி பாடம் நடத்தி வருகிறார். ஆன்லைன் வகுப்புகளை அணுக முடியாத, மாணவர்களுக்கு அவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். உங்கள் வீட்டு வாசலில் கல்வி என்ற இத்திட்டத்தின் மூலம் பல பள்ளிக் குழந்தைகள் சமூக இடைவெளியுடன் பாடத்தை படித்து பயன்பெறுவதாக கூறப்படுகிறது. 

Categories

Tech |