Categories
தேசிய செய்திகள்

 புதிய வேளாண் சட்டம்… பஞ்சாபில் தொடரும் 7வது நாள் போராட்டம்… விவசாயிகள் ஆவேசம்…!!!

புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக பஞ்சாபி விவசாயிகள் தொடர்ந்து 7வது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் அனைவரும் ‘ரயில் ராகோ’ என்ற பெயரில் ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது. பஞ்சாபி பாடகர்கள் பத்தின்டா என்கின்ற இடத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் புதிதாக கொண்டு வந்துள்ள விவசாய சங்கங்களை திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.

அதுவரையில் தாங்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாகவும், அடுத்த மாதம் முதல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.அதுமட்டுமன்றி நிறைய தனியார் நிறுவனங்களை புறக்கணிக்க விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் வலுப்பெற்று இருப்பதால் பஞ்சாபில் ரயில் சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |