நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.
நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது.இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.மேலும் சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்கள், மூத்த மகன் மற்றும் அவரது பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். துணை முதலமைச்சர் அரசு விழாக்களில் பங்கேற்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில் தற்பொழுது துணை முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.மேலும் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.