Categories
தேசிய செய்திகள்

 ‘நான் நன்றாக இருக்கிறேன்’…. வாழ்த்துக் கூறிய நல் உள்ளங்களுக்கு நன்றி… வெங்கையா நாயுடு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில்குணம் அடைய வேண்டி முதல் மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு தனது நன்றியை கூறியுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் நலமுடன் இருக்கிறேன். நான் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்திய முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறேன்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |