புனே அருகே உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பல லட்சம் மதிப்பிலான ரசாயன பொருட்கள் அனைத்தும் எரிந்து போயின.
மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் அமைந்துள்ளது.அங்கு இருக்கின்ற ஒரு ரசாயண தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென ஆலையின் அனைத்து பகுதிகளிலும் பரவத் தொடங்கியதால், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் மிக விரைவாக தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.தீ விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதன்பிறகு தொழிற்சாலையை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள் சேதமடைந்தன. ஆனால் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே பகுதியில் கடந்த மே மாதம் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பெரும் அளவில் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.