தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.அரசியல் கட்சிகளின் சார்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக தற்போது முக்கிய முடிவினை அறிவித்துள்ளது.
இதுவரை தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒரே ஒரு பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திமுக சார்பில் பொறுப்பாளர் பதிவியானது இரண்டாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் தங்கம் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து பல்வேறு அதிரடி முடிவுகள் கட்சி சார்பில் இனி எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.