Categories
மாநில செய்திகள்

ஒரு ரூபாய் அபராதம் தருவேன்… ஆனால் தீர்ப்பை ஏற்க மாட்டேன்… பிரசாந்த் பூஷன் மனு தாக்கல்…!!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷன் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் செய்த குற்றத்திற்காக ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அந்த அபராதத்தைஅவர் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒரு ரூபாய் அபராதத்தை நீதிமன்றத்தில் பிரசாத் பூஷன் செலுத்தினார். அதே சமயத்தில் தீர்ப்பை ஏற்க மறுத்த அவர், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |