கர்நாடகாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.
கர்நாடக சுகாதாரத்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் கொரோனா குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் மூச்சுத்திணறல், காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் மருத்துவ மையங்களுக்கு வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த மருத்துவ மையங்கள் மார்பில் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பினால் ஒரு சளி மாதிரி சேகரிப்புக்கு 200 ரூபாய் கட்டணம் வழங்கப்படும்.
தாங்கள் பரிசோதனை செய்யும் அதே மருத்துவ மையத்தில் ஆய்வகம் இருந்தால் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒருவேளை அந்த வசதி அங்கு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் இருக்கின்ற காய்ச்சல் மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொரோனாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை தடுக்கவும்,கொரோனா பாதிப்பு முன்கூட்டியே கண்டறிந்து உயிரிழப்புகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது”என்று அவர் கூறியுள்ளார்.