கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது.அதில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்து தங்களின் படிப்பு குறித்த சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.அவ்வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் மாணவர்கள் அனைவரும் கடந்த மாதம் 30ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்புமேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வருகின்ற 15ஆம் தேதி வரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளுக்கு வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.