Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி… அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுக்கும் இந்தியா…!!!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. என் நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியாக உள்ள மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை 6 மணியளவில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. அவர்கள் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு மோதலில் ஈடுபட்ட இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்தது.ஆனால் அந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் அப்பகுதியில் தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |