உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேஷத்தில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஹத்ராஸ். அந்த பகுதியில் தான் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் இருக்கின்றது. குடும்பத்தாரை சந்திப்பதற்காக இன்று காலை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மூலமாக வந்து கொண்டிருந்தனர்.டெல்லி – லக்னோ தேசிய நெடுஞசாலையில் காவல்துறையினரால் அனைவரும் தடுத்து நிறுத்தபட்டனர்.
ஏற்கனவே அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், யாரும் அந்த பகுதியில் அனுமதி கிடையாது என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனால் வாகனங்களில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நெடுஞ்சாலையில் நடந்து செல்ல முற்பட்டார். காவல்துறையினர் உடனடியாக ராகுல் காந்தியை அனுமதிக்க மறுத்து கைது செய்து இருக்கின்றார்கள். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.