உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பெண்ணின் உடலை போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவர்களாகவே அடக்கம் செய்தது மிகவும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தாரை சந்திக்க சென்றனர். ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தபோது தடுத்த போலீசார் ராகுல் காந்தியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வு நடந்த போது ராகுல் காந்தியின் நெஞ்சில் கை வைத்து, அவர் கீழே விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.