விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு நன்மை, தீமை என்று பலன்கள் கலந்தே காணப்படும். இன்று நீங்கள் பொறுமை காக்கவேண்டும்.
இன்று சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும். இன்று பணியில் திருப்தி காணப்படாது. நீங்கள் சமாளித்து பணிகளை ஆற்ற வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவு இன்று குறைந்து காணப்படும். இன்று நீங்கள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்களின் துணையுடனான புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள். அதிக சிந்தனை காரணமாக உங்களுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும். இன்று தியானம் மேற்கொள்வது நல்லது. சிவ வழிபாடும், முருக வழிபாடும் உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.