Categories
தேசிய செய்திகள்

“லுடோ விளையாட்டு” தொடர்ந்து வெட்டிய தந்தை…. நீதிமன்றத்தை நாடிய மகள்…!!

தொடர்ந்து லுடோ விளையாட்டில் தந்தை தோற்கடித்து கொண்டே இருந்ததால் மகள் நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஊரடங்கு சமயத்தில் இளம் பெண் ஒருவர் தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையுடன் லுடோ விளையாட்டு விளையாடி உள்ளார். அதில் அந்தப் பெண்ணின் தந்தை தொடர்ந்து மகளை தோற்கடித்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் குடும்ப நீதிமன்ற ஆலோசகரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து குடும்ப நீதிமன்ற ஆலோசகர் கூறுகையில் “24 வயதுடைய பெண்ணொருவர் தனது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் லுடோ  விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது தந்தை தொடர்ந்து இந்தப் பெண்ணை தோற்கடித்து வந்துள்ளார். நடப்பது விளையாட்டு என்பதையும் மறந்து அந்தப் பெண் தந்தை தனக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக நினைத்து விட்டாள். தந்தை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பெண் அவர் தன்னை தோற்கடிக்க மாட்டார் என்று நினைத்திருந்தார். ஆனால் பலமுறை தந்தை மகளின் காயினை வெட்டியதால் கோபம் கொண்ட மகள் தந்தையிடம் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டாள்.

தனது உணர்வுகளை அந்தப் பெண் குடும்பத்தினருடன் பகிர விரும்பவில்லை. இது குறித்து ஆலோசனை பெற எங்களிடம் வந்த போது இது பற்றி பகிர்ந்து கொண்டார்.நான்கு முறை நாங்கள் அந்தப் பெண்ணிற்கு ஆலோசனை கொடுத்தோம். தற்போது அவரது மனநிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. சாதகமான தீர்வை நாங்கள் கண்டுபிடிப்போம்.

அம்மா இல்லாத அந்த வீட்டில் அந்தப் பெண்தான் கடைக்குட்டி உடன்பிறந்தவர்கள் இருவருடன் சேர்த்து மூன்று பேரையும் தந்தைதான் கவனித்து வருகிறார். குடும்பத்தில் இருப்பவர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து விட்டால் அது மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதோடு இப்போது உள்ள குழந்தைகள் தோல்வியை தாங்கிக் கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |