Categories
மாநில செய்திகள்

புதுவைக்கு மது பிரியர்கள் வருவார்களா?… இன்று முதல் திறக்கப்பட்ட மது பார்கள்…!!!

புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று மது பார்களை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மாலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து, மதுக்கடைகள், மது பார்கள், உணவகங்கள், விடுதிகள், வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு மத்திய அரசு கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது.மூன்று மாதங்களுக்குப் பின்னர் மே மாதம் இறுதியில் 25ஆம் தேதி மதுக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கக்கூடிய வகையில் கூறும் வழி முதல் மூன்று மாதங்களுக்கு விதிக்கப்பட்டது. அந்த வரி விதிப்பால் புதுவையில் மதுபானங்களின் விலை தமிழகத்திற்கு இணையாக எகிறியது. இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வகையில் புதுவையில் வருகின்ற 15ஆம் தேதி முதல் திரையரங்கங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் மது பார்கள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்று நள்ளிரவு அனுமதி வழங்கப்பட்டதால் ஒரே நேரத்தில் அனைத்து கார்களும் திறக்கப்படவில்லை. மேலும் மது பார்களை சுத்தம் செய்யும் பணி,சமூக இடைவெளியின் படி இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகளில் மதுபான உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில மது பார்கள் மட்டுமே இன்று திறக்கப்பட்டன. அதுமட்டுமன்றி நாளை காந்தி ஜெயந்தி என்பதால் வருகின்ற மூன்றாம் தேதி முதல் மது பார்கள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட உள்ளது. பொதுப் போக்குவரத்து தடை, மதுபான விலை உயர்வு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த காலத்தைப்போல மது பிரியர்கள் புதுவைக்கு வருவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Categories

Tech |