அஞ்செட்டி அருகே உள்ள பகுதியில் பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதியன்று தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதுபற்றி அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. அதுமட்டுமன்றி அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இயற்கை கிணறு பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஓட்டல் உரிமையாளர் கோவிந்தசாமி மற்றும் சின்னமோட்ராகிஎன்ற பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பத்திநாதன் ஆகிய 2 பேரையும் நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.