Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.இன்று பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துமீறிய தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

 

Categories

Tech |