காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். வெளியான முடிவில் எனது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.