உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் டெல்லி நோய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனால் போலீசின் தடையை மீறி ராகுல் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் இழுத்துப் பிடித்து கீழே தள்ளினர்.
அதில் நிலைதடுமாறிய ராகுல்காந்தி தரையில் விழுந்தார்.அதன்பிறகு அப்பகுதியிலிருந்து பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல்காந்தி தரையிலிருந்து மேலே தூக்கப்பட்டார். அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களைக் கண்டு பிரியங்கா காந்தி பெரிதும் பதற்றம் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராகுல் காந்தியுடன் வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பெரும் ஆவேசம் அடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்டு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.